பைக் சாகசம்






வீர சாகசங்கள் நன்றி தின மணி

4 % அகவிலைப்படி

சென்னை, ஜன.13-

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 11.58 மணிக்கு கூடியது.

கவர்னர் பர்னாலா 11.56 மணிக்கு கோட்டைக்கு வந்தார் அவரை சபாநாயகர் காளிமுத்து, சட்டமன்ற செயலாளர் ராஜாராமன் ஆகியோர் அழைத்து வந்தனர்

முதல் அமைச்சர் ஜெயலலதா உள்பட அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் 11.50 மணிக்கே சபைக்கு வந்திருந்தனர்.
கவர்னர் சட்டமன்றத்துக்குள் நுழைந்ததும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று கும்பிட்டு வரவேற்றனர். பதிலுக்கு கவர்னரும் கும்பிட்டவாறு சபாநாயகர் இருக்கைக்குச் சென்றார். தமிழ்தாய் வாழ்த்து முடிந்ததும் 11.58 மணிக்கு கவர்னர் உரை நிகழ்த்தினார். 54 பக்கம் கொண்ட ஆங்கில உரையை அவர் வாசித்தார். உரையின் தொடக்கத்தில் உறுப்பினர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

தமிழக மக்களின் பயனுக்காக வளர்ச்சி இலங்குகளை எய்துவதில் அர்ப்பணிப்பு உணர்வுமிக்க அரசுப்பணி யாளர்களின் பங்களிப்பை இவ்வரசு மிகவும் மதிக்கிறது. மத்திய அரசு அதன் பணியாளர்களுக்கு வழங்கிய அகவிலைப்படி உயவர்வுத் தவணைகளை, இவ்வரசு சந்திக்க வேண்டியிருந்த நிதி நெருக்கடியின் காரணமாக, உடனுக்குடன் வழங்க இயலாமாற்போயிற்று.

பின்னர் இவ்வரசு அயராத பெரும் முயற்சிகளை மேற்கொண்டு நிதி நிலையைச் சரி செய்து, அக விலைப்படி உயர்வுகள் படிப்படியாகக் குறைந்த கால இடைவெளியுடன் அளிக்கப்படுவதை உறுதி செய்துள்ளது.

தற்போது மாநில அரசுப் பணியாளர்களுக்கும் ஓய்வூதி யர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை 1-1-2006 முதல் அடிப்படைச் சம்பளத்தின் 67 சதவீதத் திலிருந்து 71 சதவீதமாக உயர்த்து இவ்வரசு முடிவு செய்துள்ளது.

இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.282 கோடி கூடுதல் செலவாகும்.

அதிகமாக அரசு ஊழியர்களுக்கு அளக்கப்போவதாக தகவல் வந்தது ஒன்றையும் காணவில்லை. பிறகு அம்மா அறிவிப்பாங்களோ?

எனது பொங்கல் வாழ்த்துகள்

பலர் பலமுறை முயன்றும் சரியாக தொடுப்பு கிடைக்க வில்லை என்பதைப் படித்துப் பார்த்தேன் . ஆனால் என்ன ஆச்சரியம் எனக்கு உடனே கிடைத்து விட்டது.

உஙகள் அணைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்