புத்தர்

புத்தர் கடுந்தவம் புர்ந்து கொண்டிருந்தபோது மன்மதன் அவர் முன்தோன்றி அவரை மயக்கமுயன்றான். அது போழ்து புத்தர் என்செய்தார்? ஆசை என்னும் காற்று வீசும்போது அற்ப மனதையுடையவர் செடி கொடிகளைப் போன்று ஊசலாடுவர். கற்பாறை போன்று உறுதியான உள்ளத்தையுடையவர் முன் ஆசை என்னும் புயல்காற்று என் செய்யும்? மன்மதனால் மயக்கப்பட்டபோது புத்தர் செய்த தீர்மானம் சாதகர்களுக்குச் சந்ததமும் உயிர் ஊட்டவல்லதாகும். சிங்கம்போன்று அவர் கர்ஜித்த சபதமாவது:-"பரவத ராஜனாகிய மேரு தன் இடத்தைவிட்டு நகரலாம். அண்டங்களெல்லாம் நொறுங்கி ஆகாயத்தில் மறைந்து போகலாம். சூரியனும் ச்நதிரனும் நட்சத்திரங்களும் தத்தம் போக்கினின்று பிசகிவிடலாம், ஜகத்திலுள்ளள ஜீவர்களெல்லாரும் ஒரே மனப்பான்மை பெற்றிடலாம், சமுத்திரம் வறண்டு போய்விடலாம்--ஆனால் ஓ மன்மதா! நான் கொண்டுள்ள விரதத்தினின்று நீ என்னை அணுவளவும் அகற்ற முடியாது" என்றார்

2மறுமொழிகள்:

6:52 AM, July 11, 2009மணிக்கு, எழுதியவர்: Blogger Unknown

Budhaa confident is wonderful, He had lot of holyness with him, I want to convert like as Budhaa. Is it possible now? i don't know

 

7:05 PM, July 11, 2009மணிக்கு, எழுதியவர்: Blogger நல்லவன்

Thanks very much Mr. Ram

 

Post a Comment

<< முகப்பு